MARC காட்சி

Back
நெய்வேலிச் செப்பேடு
245 : _ _ |a நெய்வேலிச் செப்பேடு -
500 : _ _ |a

முன்பக்கம் 73 வரிகளும், பின்பக்கம் 92 வரிகளும் ஆக 165 வாசக வரிகளுடன் நீள் சதுரமாகக் காணப்படும் இச்செப்பேட்டில் துளையுடன் கூடிய வட்டக் கைபிடி அமைப்பு மேல் பகுதியில் உள்ளது. பிடி அமைப்பில் முன்புறம் 6 வரிகளில் “ராசனாறாணய்யனவர்களுக்கு எழுகரைனாட்டுப் பன்னாட்டாரெ திக்குடுத்த சாதனப் பட்டைய உ“ என்றும் பின்புறம் 5 வரிகளில் “யிடங்கை வாத்தியம் மேள முதலான தாரை கொம்பு துடுப்பு தப்பட்டை வாத்தியவுள்பட“ என்றும் பொறிக்கப்பட்டுள்ளன. முன்பக்கம் கைலயங்கிரியில் உமாசகிதராக சிவபெருமான் அமர்ந்த வண்ணம் எதிரே உள்ள முனிவருக்கு மாலை வழங்கும் காட்சி கோட்டுருவமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. முனிவரின் அருகில் ஓமத்தீயிலிருந்து அம்பும் வில்லும் ஏந்திய உருவம் வெளிப்படுவதாகப் பொறிக்கப்பட்டுள்ளது. உமையின் அருகில் எருமைத்தலை மீது துர்க்கையுருவம் உள்ளது. துர்க்கையை அடுத்து ஆசனத்தில் அமர்ந்த ஆண் உருவம் பேசுவதுபோல் காட்டப்பட்டுள்ளது. இவை செப்பேட்டில் சொல்லப்படும் செய்திகளுக்கு ஒப்ப உள்ளன. இச்செப்பேட்டில் வெங்கிடபதி நாயக்கர் மற்றும் தளவாய் பெத்தன நாயக்கர் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர். ருத்திரப்பள்ளியார் வரத்தினால் தோன்றிய பார்ப்பள்ளி, துட்டபள்ளி, சிஷ்டப்பள்ளி, வன்னிய பள்ளி, அரசபள்ளி என ஐந்து சாதி பள்ளிகள் தேசமெங்கும் பரவி பண்ணாட்டார் என்று புகழுடன் இருந்தபோது அவர்களுக்குரிய விருதான பஞ்சவர்ண பாவாடையை வலங்கையார் பறித்துக் கொண்டனர். சேலம், ராசிபுரம், சேந்தமங்கலம், பூந்துறை, பூவாணி, ஓமலூர், தென்கரைக்கோட்டை என்று பலபகுதியில் இருந்த இடங்கை பண்ணாட்டார்கள் ஒன்றுகூடி வலங்கையருடன் சேலம் அருகில் கருப்பூரில் கைகலக்கும் நிலை ஏற்பட்டது. கம்பளராயரான வெங்கிடப்ப நாயக்கரும், தளவாய் பெத்தள நாயக்கரும் சமரசம் செய்து முனைந்து வலங்கையாரை அழைத்து அவர்களது தோற்றம் முதலிய புராணங்களைக் கேட்டனர். பின்னர் இடங்கையாரை அழைத்து அவர்களது புராணத்தைக் கேட்டனர். இந்நிலையில் நாராயண தீக்ஷிதர் குமாரர் ராசநாராய அய்யர் வலங்கை, இடங்கையர் சமயார்த்தம், இடங்கையார் பிறப்பு வளர்ப்பு, வன்னிய புராணம் என அனைத்தையும் எடுத்துக் கூறினார். விருதுகள் இடங்கையரான பண்ணாட்டார்க்கு உரியது என்றும் கூற, வலங்கையார் அதனை ஏற்க மறுத்து காஞ்சிபுரம் பொன்னம்மன் சன்னதியில் வலங்கை இடங்கை இருவர் பேரும் திருவெழுத்தாகத் தனித்தனியே எழுதி அக்னியிலிட வலங்கை திருவெழுத்து வெந்து போனதென்றும் இடங்கை திருவெழுத்து வேகாததால் அவர்களே விருதுக்கு உடைய பெரியோர் என கம்பள ராயர் முடிவு அறிவித்தார் என்றும் இச்செப்பேட்டில் சொல்லப்பட்டுள்ளது. தங்களது பெருமையை நிலைநாட்டிய ராசநாராயண அய்யரைச் சிறப்புச் செய்வதற்காக பண்ணாட்டார் சேலம் கிளிவண்ணநாதர் கோயிலில் கூடி பொன்னம்மன் சாட்சியாக கீழ் கண்ட தீர்மானங்களை நிறைவேற்றி அவருக்குப் பட்டயம் எழுதிக் கொடுத்தனரர். அதன்படி வருடம் தோறும் குருக்காணிக்கை பெரியகுடிக்கு 2 பணம், சிறிய குடிக்கு 1 பணம், கல்யாணத்தில் தாரை வார்க்கிற நீர்பணம் மற்றும் ஏர் ஒன்றுக்கு நான்கு வள்ளம் தானியம் கொடுப்பது என்று தீர்மானித்தனர். இத்தீர்மானத்திற்கு 62 ஊர்களைச் சேர்ந்தவர்கள் ஒப்புதல் அளித்தனர். ஊர்ப்பெயர்களும், ஆட்பெயர்களும் நீண்டப்பட்டியலாகச் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளன.

510 : _ _ |a தமிழகச் செப்பேடுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை.
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இடங்கை, வலங்கை, காஞ்சிபுரம் பொன்னம்மன், ராசநாராயண அய்யர், பண்ணாட்டார், கம்பள ராயர், பெங்கிடபதி நாயக்கர், தளவாய் பெத்தன நாயக்கர்
752 : _ _ |a நெய்வேலி |c நெய்வேலி |d கடலூர்
905 : _ _ |a நாயக்கர் / வெங்கிடபதி நாயக்கர், தளவாய் பெத்தன நாயக்கர்
906 : _ _ |a கி.பி.1633
914 : _ _ |a 11.5432364
915 : _ _ |a 79.4760133
995 : _ _ |a TVA_CPS_00048
barcode : TVA_CPS_00048
book category : விசயநகரர், நாயக்கர்
cover :
Primary File :

Neyveli - 1.jpg

Neyveli - 2.jpg

Neyveli - 3.jpg

Neyveli - 4.jpg

Neyveli - 5.jpg

Neyveli - 6.jpg

Neyveli - 7.jpg

Neyveli - 8.jpg

Neyveli - 9.jpg

Neyveli - 10.jpg

Neyveli - 11.jpg

Neyveli - 12.jpg

Neyveli - 13.jpg

Neyveli - 14.jpg

Neyveli - 15.jpg

Neyveli - 16.jpg

Neyveli - 17.jpg

Neyveli - 18.jpg

Neyveli - 19.jpg

Neyveli - 20.jpg